Skip to main content

Posts

Showing posts with the label AADI KATHU

AADI POORAM SPECIALITY

ஆடிப்பூரம்: சூடிக்கொடுத்த சுடர்கொடியாளின்சிறப்பை அறிவோம்! ஆண்டாள் முகம் பார்த்த கண்ணாடி: ஆண்டாள், ரெங்கமன் னாரை நினைத்து தினமும் மாலையை சூடிக்கொள் வார். தான் அணிந்த மாலை எப்படியிருக்கிறது என இங்கிருந்த கிணற்று நீரை பயன்படுத்தியுள்ளார். அக்கிணறு இன்று வரை பாதுகாக்கப்பட்டு வருகிறது. மூலஸ் தானத்தின் முன்புறம் இக்கிணறு உள்ளது. இக்கிணற்றை கண்ணாடி கிணறு என அழைக்கின்றனர். -ஜானகிராமன், ஸ்ரீவில்லிபுத்தூர். மறுமையில் இன்பம் அடையும் வழியுண்டு: பன்னிரெண்டு ஆழ்வார்களில் ஏழாவது ஆழ்வாராக ஸ்ரீவில்லிபுத்தூரில் வாழ்ந்தவர் தான் பெரியாழ்வார். பெரியதொரு நந்தவனம் அமைத்து வடபெருங்கோயில் உடையானுககு திருமாலை கட்டிச்சாற்றி வந்தார். அக்காலத்தில் ஸ்ரீவல்லப தேவன் என்னும் அரசன் மதுரையைத் தலைநகராகக் கொண்டு பாண் டிய நாட்டை ஆண்டு வந்தான். ஒரு நாள் நகர சோதனைக்கு சென்ற போது ஒரு வீட்டுத்திண்ணையில் உறங்கும் ஒரு அந்தணரைக் கண்டார். அவர் மூலம் "மறுமையில் இன்பம் அடைய, இப்பிறப்பிலே முயற்சி செய்ய வேண்டும் என்ற விசயத்தைப்புரிந்து கொண் டார். அரசனும் தன் புரோகிதரான செல்வநம்பியிடம்மறுமையில் பேரின்பம் பெற என்ன வழி என்ற...