ஆடிப்பூரம்: சூடிக்கொடுத்த சுடர்கொடியாளின்சிறப்பை அறிவோம்!
ஆண்டாள் முகம் பார்த்த கண்ணாடி: ஆண்டாள், ரெங்கமன் னாரை நினைத்து தினமும் மாலையை சூடிக்கொள் வார். தான் அணிந்த மாலை எப்படியிருக்கிறது என இங்கிருந்த கிணற்று நீரை பயன்படுத்தியுள்ளார். அக்கிணறு இன்று வரை பாதுகாக்கப்பட்டு வருகிறது. மூலஸ் தானத்தின் முன்புறம் இக்கிணறு உள்ளது. இக்கிணற்றை கண்ணாடி கிணறு என அழைக்கின்றனர்.
-ஜானகிராமன், ஸ்ரீவில்லிபுத்தூர்.
மறுமையில் இன்பம் அடையும் வழியுண்டு: பன்னிரெண்டு ஆழ்வார்களில் ஏழாவது ஆழ்வாராக ஸ்ரீவில்லிபுத்தூரில் வாழ்ந்தவர் தான் பெரியாழ்வார். பெரியதொரு நந்தவனம் அமைத்து வடபெருங்கோயில் உடையானுககு திருமாலை கட்டிச்சாற்றி வந்தார். அக்காலத்தில் ஸ்ரீவல்லப தேவன் என்னும் அரசன் மதுரையைத் தலைநகராகக் கொண்டு பாண் டிய நாட்டை ஆண்டு வந்தான். ஒரு நாள் நகர சோதனைக்கு சென்ற போது ஒரு வீட்டுத்திண்ணையில் உறங்கும் ஒரு அந்தணரைக் கண்டார். அவர் மூலம் "மறுமையில் இன்பம் அடைய, இப்பிறப்பிலே முயற்சி செய்ய வேண்டும் என்ற விசயத்தைப்புரிந்து கொண் டார். அரசனும் தன் புரோகிதரான செல்வநம்பியிடம்மறுமையில் பேரின்பம் பெற என்ன வழி என்று கேட்க, அவரிடம் வித்வான்களைக் கூட்டி பரம் பொருளைப்பற்றி நிர்ணயம் செய்வித்து அவ்வழியாலே பேறு பெற வேண்டும் என்று சொல்ல, அரசனும் இசைந்து பெருந்தனத்தை ஒரு வஸ்திரத்தில் முடிந்து ஒரு தோரணத்திலே கட்டச் செய்தார். பரதத்வ நிர்ணயம் செய்பவர், இப்பொற்கிழியைப்பரிசாகப் பெறலாம் என்று வித்வான்களுக்குஅறிவித்தார். வடபெருங்கோயிலுடையான் விஷ்ணு சித்தருடைய கனவில் தோன்றினார். நாமேபரம தெய்வம் என்று நிர்ணயம் செய்து, நீர்போய் பொற்கிழியை அறுத்துக் கொண்டு வா என்றார். விஷ்ணு சித்தரின் சந்தேகங்களையும்நிவர்த்தி செய்தார். கனவு கலைந்தது. மறுநாள் அரசபை சென்றார் விஷ்ணு சித்தர். அங்கு ஸ்ரீமத் நாராயணனே பரம்பொருள் என்றார். பொற்கிழி இவர் முன்னே தான தாழ வளைந்து தந்தது. அப்பொற்கிழியை அறுத்து வசப்படுத்தினார். ஸ்ரீவல்லப தேவன், ஆழ்வாரை தனது பட்டத்து யானை மேலேற்றி வலம் வரச் செய்தார். இவருக்கு ஸ்ரீமத்நாரயாணன், ஸ்ரீதேவி, ஸ்ரீபூதேவிகளுடன் காட்சி தந்தார். விஷ்ணு சித்தரை பெரியாழ்வார் என அழைத்தார். பொற்கிழியுடன் ஸ்ரீவில்லிப்புத்தூர் சென்ற பெரியாழ்வார் வடபெருங்கோயிலுடையானுக்கு பணிகள் பல செய்தார். நந்தவனம் அமைத்து பூக்களைக் கொண்டு திருமாலை கட்டி கடவுளை வணங்கினார். ஆண்டாளை கண்டெடுத்து வளர்த்தார். திருப்பாவை, நாச்சியார் திருமொழியை உலகுய்யப்ப பாடுவதற் கும் காரணமாயிருந்தது. அவரை அரங்கனுக்கே அர்ப்பணித்த பெருமையுடையராவார்.
ஸ்ரீராமானுஜரை வரவேற்கும் ஆண்டாள்: கோயில் மூலஸ்தானத்தில் ஆண்டாள்-ரெங்கமன்னார் கருட வாகனத்தில் எழுந்தரு ளியுள்ளனர். இது பிரணவத்தின் பிரதி பிம்பமாக அகர, உகர, மகார தத்துவ விளக்கத்தை காட் டுவதாகும். கர்ப்ப கிரகத்தை விட சிறிது தூரம் எழுந்தருளி யுள்ளனர். இதன் ஐதீகம் ஸ்ரீராமானுஜர், ஆண்டாளை சேவிக்க வந்தார். அவரை ஆண்டாள் வரவேற்க வந்ததை குறிக்கும் வகையில் இது உள்ளது. ஸ்ரீரங்க மன் னாரின் பிறந்த நட்சத்திரமான சித்திரை மாத ரேவதி நட்சத்திரத்தன்று காலையில் ஸ்ரீலட் சுமி நாராயணன் சன்னதிக் கருக்கே உள்ள மண்டபத் தில் ஸ்ரீஆண்டாள் எழுந் தருளி பக்தர் களுக்கு அருள் பாலிப்பார்.
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் தேரோட்டம் திருஷ்டிக்காக பாடிய பாடல்: ஸ்ரீவில்லிபுத்தூரில் வசித்த பெரியாழ்வார் மதுரையில் நடந்த போட்டியில் பொற்கிழி பரிசு பெற்றார். பெருமாள் கருட வாகனத்தில் தோன்றி, இப்பரிசை கிடைக்கச் செய்தார். இந்தக் காட்சியை அங்கு திரண்டிருந்த பல்லாயிரக்கணக்கானோர் தரிசித்தனர். மக்களின் கண் பெருமாள் மீது பட்டு அவருக்கு திருஷ்டி ஏற்பட்டிருக்குமோ, அவருக்கு ஏதாவது ஆபத்து ஏற்படுமோ என பெரியாழ்வார் அஞ்சினார். பக்தியின் உயர்நிலை இது. எனவே, அவர் பல்லாண்டு வாழ வேண்டும்.
"பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு பலகோடி நூறாயிரம்,
மல்லாண்ட திண்தோள் மணிவண்ணா
உன் சேவடி செவ்வி திருக்காப்பு என்று துவங்கி "திருப்பல்லாண்டு பாடினார். இந்த உயர்ந்த பக்தியை மெச்சிய பெருமாள், "நீரே பக்தியில் பெரியவர் என வாழ்த்தினார். அதுவரையில் "விட்டுசித்தன் (விஷ்ணு சித்தர்)என்று அழைக்கப்பட்ட இவர், "பெரியாழ்வார் என்னும் திருநாமம் பெற்றார். இந்தப் பல்லாண்டுப் பாடலே உலகம் முழுவதும் உள்ள திருமால் கோயில்களில் தினமும் பாடப்படுகிறது.
Comments
Post a Comment